Categories
சினிமா

சூப்பர் ஸ்டார் நடிகரை சந்தித்து பேசிய பிரபல இயக்குனர்…. என்ன பேசினார்கள்?…. வெளியான தகவல்….!!!

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் தற்போது பரபரப்பான இயக்குனர்களில் ஒருவர். இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் முதல் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது முதல் படத்திலேயே ரசிகர்களை மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார். அதனைத் தொடர்ந்து “கைதி” படத்தை இயக்கி வெற்றி கண்டு அடுத்த கட்டத்திற்கு சென்றார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசனை இயக்கியிருக்கும் “விக்ரம்” திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் அனிரூத் இசையமைதுள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் “விக்ரம்” படத்தின் ப்ரோமோஷன் வேலைக்காக லோகேஷ் கனகராஜ் ஹைதராபாத் சென்றுள்ளார். அப்போது அவர் தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் மகேஷ் பாபுவை சந்தித்து ஒரு மணி நேரமாக பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மகேஷ் பாபுவிற்கு லோகேஷ் கனகராஜ் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றும் அவரின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஆசை உள்ளது என்றும் தகவல் வெளிவந்துள்ளது. எனவே விக்ரம் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் அதன்பிறகு மகேஷ்பாபுவுடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |