யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஒரு திரைப்படத்தின் டைட்டில் , பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரஜினி பிறந்தநாளில் வெளியிட இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் எலான் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியிட இருப்பதாகவும் அது ஏன்? என்பதை கண்டுபிடியுங்கள் என்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
#HEY , any guesses ? Why on our Superstar’s birthday ? @elann_t @iamharishkalyan @Screensceneoffl @onlynikil @CtcMediaboy @sidd_rao @nixyyyyyy pic.twitter.com/jJl37Z7Js0
— Raja yuvan (@thisisysr) December 11, 2020
இந்த திரைப்படத்தின் டைட்டில் ரஜினியின் திரைப்படத்தின் டைட்டில் அல்லது அவரது பஞ்ச் டயலாக் டைட்டிலாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் யுவன் சங்கர் ராஜா போட்ட இந்த புதிர் ட்வீட்க்கு விடை என்ன என்பது நாளை தான் தெரியவரும்.