Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போ?… மரண மாஸ் அப்டேட்…!!!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ், ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ரஜினிக்காக பாடிய பாடல் வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.

Categories

Tech |