Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… இணையத்தில் கசிந்த படப்பிடிப்பு வீடியோ…!!!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது திரைப்படங்கள் தொடர்ந்து வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. தற்போது நடிகர் ரஜினி இயக்குனர்  சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

https://twitter.com/Thalaivar_NFP/status/1389874038722412545

இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் வருகிற தீபாவளிக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது . இந்நிலையில் சமீபத்தில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |