சூப்பர் ஸ்டார்ட் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கோ பூஜை, கோவில்களில் பூஜை என கொண்டாடி வருகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.
அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் சங்கர மடத்தில் கோ பூஜை, கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறது. அதனால் ட்விட்டரில் #HappyBirthdayRajinikanth என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.