Categories
சினிமா

“சூப்பர் ஸ்டார் ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்”…. அசந்து போன இயக்குனர்…. அப்படி என்னப்பா பண்ணாரு?….!!!!

படையப்பா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் கே.எஸ்.ரவிக்குமார் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினி. இவர்  நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்களை தவிர மற்ற அனைத்து படங்களும் மெகாஹிட் வரிசையை சார்ந்தது. பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை, எந்திரன் என நாம் சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு ரஜினின் பல படங்கள் இன்றளவும் ரசிகர்களின் மனதில் நிலைத்து இருக்கிறது. அந்த ஹிட்வரிசையில் “படையப்பா” படம் முக்கிய இடத்தை பிடித்தது.

இந்த படம் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்து மெகா ஹிட் ஆகியது. பொதுவாக வில்லன்களாக ரஜினி படத்தில் ரகுவரன், ஆனந்தராஜ் உள்ளிட்டவர்கள் நடித்த நிலையில் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நீலாம்பரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஏ.கே.எஸ் ரவிக்குமார் ரஜினியுடன் இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதனை ரம்யா கிருஷ்ணனின் வில்லி கதாபாத்திரத்தை எப்படி படத்தில் அறிமுகம் செய்யலாம் என்று கே.எஸ்.ரவிக்குமார் யோசித்துக் கொண்டிருந்தபோது, ரஜினி சிறப்பான யோசனை ஒன்று கொடுத்துள்ளார். அதன்படி கே.எஸ்.ரவிக்குமார் புதிதாக வாங்கிய காரை படப்பிடிப்பு தளத்திற்கு ரஜினியிடம் காண்பிக்க வந்துள்ளார். அந்த காரின் கதவு பறவையின் இறக்கை போல இருந்தது. இதனை பார்வையிட்ட ரஜினி நீலாம்பரியின் இன்ட்ரோ காட்சிக்கு இந்த காரை பயன்படுத்தலாம் என்று இயக்குனருக்கு புது யோசனை கூறியுள்ளாராம்.

கே.எஸ்.ரவிக்குமார் அவரது யோசனையை இந்த படத்தில்  பயன்படுத்தினார். இதனை அடுத்து இந்த படத்தில் பல விஷயங்கள் ரசிகர்களை ஈர்த்தது போல், இந்த காரும் வெகுவாக ஈர்த்தது. அதன்பின் இந்த காரை எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் நீலாம்பரி கார் என்று அழைத்தார்கள். இச்சம்பவத்தை சமீபத்தில் படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |