பிரபல பாலிவுட் நடிகரான சல்மான்கானின் தம்பியும் நடிகருமான சொஹைல் கானும், பேஷன் டிசைனரான சீமா காணும் பிரிந்து விட்டார்கள். இவர்கள் 1998 ஆம் ஆண்டு முதலில் சந்தித்தார்கள். அதன் பிறகு வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் விவாகரத்துக் கோரி நீதிமன்றம் செல்வதற்கு முன்பே சில காலமாக பிரிந்து தான் வாழ்ந்தார்கள். இந்த விவாகரத்து குறித்து சீமா கூறியது, நான் நெகட்டிவிட்டியை விட்டு விட்டேன். தற்போது வாழ்க்கை பாசிட்டிவாக பார்க்கிறேன். நான் யார், இதுதான் என் குடும்பம், என் பெற்றோர், என் குழந்தைகள், உடன்பிறப்புகள் என்று மக்களுக்கு தெரிந்தால் போதும் என்று கூறினார்.
மேலும் சொஹைல் கானை பிரிந்த பிறகு சமூக வலைதள கணக்குகளில் தன் பெயருக்கு பின்னால் இருந்த கானை சீமா நீக்கிவிட்டார். இது சல்மான்கான் வீட்டில் நடந்திருக்கும் இரண்டாவது விவாகரத்து ஆகும். இதற்கு முன்னதாக சல்மான்கானின் மற்றொரு தன்மையான நடிகர் அர்பாஷ் கானும் நடிகை மலாய்கா ஆரோராவும் விவாகரத்து பெற்றனர். மேலும் மலாய்காஅரோரா தற்போது பிரபலம் பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார்.