கன்னடத்தில் வெளியான பீர்பால் படத்தின் தமிழ் ரீமேக்கில் சாந்தனு நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னட திரையுலகில் எம்.ஜி.ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பீர்பால். இந்த படம் தெலுங்கில் திம்மரசு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது . இந்நிலையில் பீர்பால் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. மேலும் இந்த படத்தில் ‘மாஸ்டர்’ பட நடிகர் சாந்தனு கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நடிகர் சாந்தனு முருங்கைக்காய் சிப்ஸ், ராவண கூட்டம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் .