நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
சினிமாவில் ஒரு கூட்டணியில் வெளியாகும் படம் ஹிட்டாகிவிட்டால் அந்தக் கூட்டணி மீண்டும் மீண்டும் இணைய வேண்டும் என ரசிகர்கள் விரும்புவார்கள் . அப்படி தமிழ் திரையுலகில் உள்ள ஹிட் கூட்டணியில் ஒன்றுதான் விஜய்-அட்லி இணையும் திரைப்படங்கள். இதுவரை இவர்கள் கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் விஜய்-அட்லி இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி வசூலை வாரி குவித்தது .
இதையடுத்து தளபதி 65 படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது . ஆனால் சில காரணங்களால் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் . தற்போது கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தளபதி 65 படத்தை இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்த அட்லி-விஜய் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் பரவி வருகிறது. அதன்படி தளபதி 66 அல்லது தளபதி 67 படத்தை இயக்குனர் அட்லி இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.