‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச அத்ரேயா’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் சந்தானம் நடித்து வருகிறார்.
தெலுங்கு திரையுலகில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச அத்ரேயா. ஸ்வரூப் இயக்கியிருந்த இந்த படத்தில் திரைக்கதை எழுத்தாளரான நவீன் பொலி ஷெட்டி கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தில் நவீன் துப்பறிவாளராக நடித்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் சந்தானம் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மனோஜ் இயக்கும் இந்த படத்தில் ஊர்வசி, விஜய் டிவி பிரபலம் புகழ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்டது என்றும் விரைவில் டைட்டில் மற்றும் பிற விவரங்களை படக்குழுவினர் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது .