பிரபல தெலுங்கு நடிகர் சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நாக சைதன்யா பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த வருடம் நாக சைதன்யாவும், சமந்தாவும் திடீரென பிரிந்து வாழப் போவதாக அறிவித்தனர். அதன் பிறகு நாக சைதன்யா, நடிகை சோபிதா உடன் டேட்டிங்கில் இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் பரவி வந்தது. இந்நிலையில் நாக சைதன்யா தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், நாக சைதன்யா பற்றிய ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழில் நடிகர் சிம்பு நடித்த மாநகரம் படம் சூப்பர் ஹிட் ஆனது.
இந்த படத்தின் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் சுரேஷ் டகுபதி வாங்கி இருந்தார். இதனையடுத்து தெலுங்கு ரீமேக்கில் உருவாகும் மாநகரம் திரைப்படத்தில் நடிகர் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் தற்போது நாக சைதன்யா மாநகரம் படத்தில் நடிக்கவில்லை என்றும், நடிகர் ராணா டகுபதி தான் மாநகரம் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் நாக சைதன்யா இழந்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.