பிரபல நடிகை ஒருவர் பட வாய்ப்பை தவறவிட்டதால் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால், தெலுங்கு சினிமாவில் நுழைந்த பூஜா ஹெக்டே முன்னணி நடிகையாக மாறினார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பூஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த சமயத்தில் சீதாராமம் படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு பூஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் கொரோனா காரணமாக பூஜாவால் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான சீதாராமம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடித்த மிருணாள் தாக்கூருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. இதன் காரணமாக சீதாராமம் படத்தில் நடித்திருந்தால், இப்போது என்னுடைய லெவலே வேற மாதிரி இருந்திருக்கும். இனிமேல் அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்காது என பூஜா தன்னுடைய நண்பர்களிடம் புலம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.