Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் சிக்கி மீண்ட எவர்கிவன் கப்பல்.. எகிப்து அரசிடம் மாட்டிக்கொண்ட நிலை..!!

எகிப்து அரசு, இழப்பீட்டு தொகை தராமல் எவர்கிவன் சரக்கு கப்பல் வெளியேற்ற அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது. 

எவர்கிவன் சரக்கு கப்பல், கடந்த மார்ச் 23-ம் தேதியில் தொடங்கி ஏறக்குறைய சுமார் ஒரு வாரமாக சூயஸ் கால்வாயின் இடையில் மாட்டிக் கொண்டது. இதனால் சுமார் 400க்கும் அதிகமான சரக்கு கப்பல்கள் பயணிக்க வழி இல்லாமல் அதிகமான வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது. எனவே எகிப்து அரசு, சுமார் ஒரு மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாக தருமாறு எவர்கிவன் கப்பல் உரிமையாளரிடம் கோரிக்கை வைத்ததுடன், தொகை செலுத்தப்படும் வரை சுமார் 20,000 கொள்கலனை கொண்டிருக்கும் அந்த கப்பலை எடுக்க முடியாது என்று கூறிவிட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும் சட்டத்தின் மூலமாக வழக்கு தொடராமல் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வு காண்பதற்கு முயற்சிக்கபட்டு வருகிறது என்று எகிப்து கால்வாய் நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது Great Bitter என்ற ஏரியில் சுமார் 25 இந்தியர்கள் உள்ள குழுவுடன் எவர்கிவன் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |