சூயஸ் கால்வாயில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நிறுவனத்திற்குரிய உலகிலேயே மிகப் பெரிதான எவர்க்ரீன் என்ற சரக்கு கப்பல் கடந்த மாதம் 23ஆம் தேதியன்று முக்கியமான நீர் வழித்தடங்களில் ஒன்றாக இருக்கும் எகிப்தின் சூயஸ் கால்வாய் வழியாக சென்றிருக்கிறது. அப்போது கால்வாயின் இடையில் திரும்பும் போது பக்கவாட்டில் தரைதட்டியதில் சிக்கி அங்கேயே நின்றது. இதனைத்தொடர்ந்து சுமார் ஒரு வாரமாக மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
அதன்பின்பு எவர்க்ரீன் சரக்கு கப்பல் கரையிலிருந்து மீட்கப்பட்ட பின்பு தான் சுயஸ் கால்வாய் மீண்டும் இயல்பு நிலைக்கு மாறியது. இந்நிலையில் இன்று சூயஸ் கால்வாயினுடைய தெற்குப்பகுதியில் M/T Rumford என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் பழுதடைந்தது. இதனால் கடல் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக Marine Traffic மற்றும் Tankers Trackers கூறியுள்ளது.
கப்பல் வட்டாரம் இது குறித்து தெரிவிக்கையில், M/T Rumford கப்பலின் இன்ஜினில் பழுது ஏற்பட்டிருப்பதாகவும், இதற்காக டிம் ஹோப் மற்றும் மொசேட் 3 போன்ற இழுபறி படகுகள் உதவியாக அனுப்பப்பட்டிருப்பதாகவும், சூயஸ் கால்வாய் தரப்பு நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.
மேலும் Tankers Trackers கூறியுள்ளதாவது, M/T Rumford கப்பல் பழுதடைந்ததால் மீண்டும் வடக்கு பகுதியை நோக்கி திரும்புவதாக தெரிவித்துள்ளது. சுமார் 10 நிமிடங்களுக்கு இந்த பிரச்சனையின் நீடித்துள்ளது. அதன் பின்பு சரி செய்யப்பட்டிருப்பதாக சுயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்துள்ளது