Categories
உலக செய்திகள்

“சூயிங்கம் சாப்பிட ஆசை” முதியவர் செய்த காரியம்…. பின்னர் நடந்தது என்ன தெரியுமா…??

முதியவர் ஒருவர் சூயிங்கம் சாப்பிடும் ஆசையில் பல சூயிங்கம் விநியோகிக்கும் இயந்திரங்களை திருடியது கண்டுபிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் Mannheim நகரில் சூயிங்கம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. அங்கு திடீரென்று 8 சூயிங்கம் விநியோகிக்கும் இயந்திரங்கள் காணாமல் போயுள்ளன. இதையடுத்து காவல்துறையினர் சூயிங்கம் இயந்திரங்களை திருடும் நபரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில்  Bruhl என்ற நகரில் உள்ள சூயிங்கம் இயந்திரம் ஒன்றை, நபர் ஒருவர் சுத்தியல் மற்றும் ஸ்க்ரூ ட்ரைவர் கொண்டு அகற்ற முயல்வதை கண்ட ஒரு பெண் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து அந்த 72 வயது நபரை பிடித்துள்ளனர். மேலும் அவரது காரில் திருட்டுப்போன இயந்திரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவை எப்படி வந்தன என்பது தனக்கு தெரியாது என்றும், மேலும் தனக்கு சூயிங்கம் ரொம்ப பிடிக்கும் என்பதால் இந்த இயந்திரத்தை கழட்ட முயன்றேன் என்று முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |