இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி நடிகர் சூர்யா நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் “சூரரைப்போற்று”, இது தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த படம் “சூரரைப்போற்று”. இத்திரைப்படத்தில் சூர்யா, அபர்ணா முரளி, கருணாஸ், ஊர்வசி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாகும். “சூரரை போற்று” தமிழில் பெற்ற வெற்றியை அடுத்து, இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
ஹிந்தியில் எடுக்கப்படும் இத்திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சேர்ந்து தயாரிக்க உள்ளது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்தியிலும் இயக்குகிறார். இந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடிகர் “அக்ஷய் குமார்” நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என தகவல் பரவுகிறது. இந்தி நடிகர் அக்ஷய்குமார் நடித்த “கேசரி, ரவுடி ராத்தோர், லட்சுமி” உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.