நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லையென்றாலும் தற்போது அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. வித்யாசமான கதாபாத்திரங்களை கொண்ட இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த திரைப்படங்கள் தியேட்டரைகளில் வெளியாகி இருந்தால் பெரும் வசூலை ஈட்டியிருக்கும்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யபட உள்ளது .மேலும் அத்திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நடிகர் அக்ஷய் குமார் இக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.