உலகிற்கு மிக அருகில் இருக்கும் கருந்துளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அந்தக் கருந்துளை சூரியனை விட 10 மடங்கு பெரியதாக இருக்கிறது என்றும் அது 1600 லைட் இயர் தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ஒளியின் வேகத்தில் சென்றால் 1200 ஆண்டுகள் எடுக்கும் அளவிற்கு தொலைவில் உள்ளது.
இதற்காக விஞ்ஞானிகள் ஜெமினி நார்த் என்ற தொலை நோக்கியை பயன்படுத்தி உள்ளனர். இந்த தொலைநோக்கி வழியே கருந்துளை மற்றும் அதன் துணை பொருளான சூரியனை ஒத்த நட்சத்திரம் ஒன்றின் இயக்கமும் ஆராயப்பட்டுள்ளது. சூரியனை பூமி ஒரு குறிப்பிட்ட தொலைவில் சுற்றுவது போல அதே தொலைவில் இந்த நட்சத்திரமும் கருந்துளையை வட்டப்பாதையில் சுற்றி வருகிறது எனகண்டறியப்பட்டுள்ளது..