Categories
உலக செய்திகள்

“சூரியன் பக்கத்தில் உருளைக்கிழங்கு வடிவில் ஒரு கிரகம்”…. ஆராய்ச்சியாளர்கள் வியப்பு….!!!!

இத்தனை ஆண்டுகளாக விண்வெளியில் கிரகங்கள் அனைத்தும் வட்ட வடிவில் உள்ளதாக நம்பி கொண்டிருந்த விஞ்ஞானிகள், தங்களது ஆராய்ச்சியில் புது முன்னேற்றம் அடைந்ததை எண்ணி பிரமித்துள்ளனர். இவ்வாறு புதிதாக ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்த பிரமிப்பில் இருந்து இன்னும் அவர்கள் விலகவில்லை. விண்வெளியை ஆய்வு மேற்கொள்வதற்கு பல நாடுகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றன. பல கோடி பணத்தை இந்த ஆராய்ச்சிக்காக அவர்கள் செலவிட்டு வருகிறார்கள். செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா..?  காற்று எங்கு சுத்தமாக இருக்கிறதா…? நிலவில் வசிப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றனவா? என்கிற ரீதியில் பல வருடங்களாக ஆராய்ச்சிகள் நீள்கின்றன. இதனிடையில் குறிப்பிட்ட நாடுகள் சில விண்வெளி ஆய்வில் ஈடுபட்டபோது பல கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டன.

அவ்வாறு கண்டறியப்பட்ட கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் இதுநாள் வரையில் வட்ட வடிவில் மட்டுமே இருந்தது. ஆனால் முதன் முறையாக அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, பார்ப்பதற்கு உருளைக்கிழங்கு  ஆகிய வடிவிலான புதிய கிரகத்தை வானியாலர்கள் கண்டுப்பிடித்துள்ளனர். இது பார்க்க உருளைக்கிழங்கு வடிவிலும், தக்காளி வடிவிலும் உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பூமியில் இருந்து 1500 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ள இந்த கோளுக்கு WASP-103b என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு மிக அருகில் காணப்படும் இந்த கோள் தன்னுடைய சுற்றளவை முடிப்பதற்கு 22 மணி நேரம் ஆகிறது. ஏற்கனவே 2014ஆம் ஆண்டில் விசித்திரமான தோற்றத்துடன் கூடிய கிரகம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சூரியனை விடவும் பெரிதாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள இந்த கோள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Categories

Tech |