அருண் விஜய் நடித்துள்ள ஓ மை டாக் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் சூரியாவை நினைத்து கண் கலங்கினார். பட விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார், சின்ன வயதில் என் மகன் சூர்யாவுக்கு நான்கு வார்த்தை கூட பேச வராது. இவன் வரும் காலங்களில் என்ன ஆகப் போகிறான் என்ற கவலை எனக்கும் என் மனைவிக்கும் அதிகமாக இருந்தது. அவனுக்கு ஆங்கிலம் சுத்தமாக ஆகாது. அவன் பள்ளிப் படிப்புக்காக கால் நடுங்க வெயிலில் நின்று சீட் வாங்கினேன். இதை பார்த்த சூர்யா என்னிடம் சண்டை போட்டான். பள்ளிக்கு போக மாட்டேன் என்று கூறினான் என்று கண் கலங்கினார். அருண் விஜய் நடித்துள்ள இந்த திரைப்படம் தென்னிந்தியாவில் மூன்றாம் தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்த இரண்டாவது படமாகும்.
Categories