Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க திரண்ட கூட்டம்…. விழாக்காலம் போல் காட்சியளித்த கன்னியாகுமரி…!!

விடுமுறை நாள் என்பதால் கடற்கரையை ரசிக்க அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அங்குள்ள கடற்கரையை ரசிப்பதற்கும் சூரிய உதயத்தை காலையில் கண்டு ரசிப்பதற்காகவும்  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கத்தைவிட அதிகமான அளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனையடுத்து விழா காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களிலும் அதிக அளவு பொதுமக்கள் இங்கு வருவார்கள்.

இவர்கள் கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன் பிறகு விவேகானந்தர் மண்டபத்திற்கு, திருவள்ளுவர் சிலைக்கும் படகில் சென்றுள்ளனர். அதைத்தொடர்ந்து காந்தி மண்டபம், சுரங்க மீன் கண்காட்சி, பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, தமிழன்னை பூங்கா, காமராஜர் மணிமண்டபம் போன்ற பல சுற்றுலா தளங்களையும் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் வந்துள்ளனர். இவர்களும் கடற்கரையை ரசிப்பதற்காக குடும்பத்துடன் வந்துள்ளனர். இதன் காரணமாக கடற்கரை பகுதி திருவிழாக்கோலம் போல் காட்சியளித்தது. அதிக அளவு சுற்றுலா பயணிகள் வந்ததால் கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.

Categories

Tech |