Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க திரண்ட கூட்டம்….. விழாக்காலம் போல் காட்சியளித்த கன்னியாகுமரி…!!

விடுமுறை நாள்  என்பதால் கடற்கரையை ரசிக்க அதிக அளவில்  சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இவர்கள் விழா காலங்கள், பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு  மக்கள் அங்கு திரண்டுள்ளனர். இவர்கள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்துவிட்டு, கடலில் நீராடி மகிழ்ந்தனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்றனர்.

இதைதொடர்ந்து காமராஜர் மணிமண்டபம், காந்திமண்டபம் போன்ற இடங்களையும் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் காவல்துறையினர் மற்றும் சுற்றுலா பாதுகாவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோன்று ஆசியாவிலேயே மிக உயரமான மரத்தூர் தொட்டி பாலத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அங்கிருந்த இயற்கை அழகை பார்த்து ரசித்தனர். அதன்பிறகு தொட்டிப் பாலத்தின் மேல் நடந்து சென்றனர். மேலும் தொட்டிப் பாலத்தின் கீழே அமைந்திருக்கும் பரளியாற்றிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Categories

Tech |