கடற்கரையை ரசிப்பதற்காக அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இவர்கள் விழா காலங்கள், பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை முதலே சூரிய உதயத்தை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் கடற்கரையில் திரண்டனர். அதன்பிறகு கடலில் நீராடி மகிழ்ந்தனர்.
இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்றனர். இதைத்தொடர்ந்து காமராஜர் மணிமண்டபம், காந்தி மண்டபம், தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, மீன் கண்காட்சி போன்றவற்றையும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.