பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியன் மறைந்து அமாவாசை போன்று திகழும். இந்நிலையில் சூரிய கிரகணம் ஏற்படும் போது பெரியவர்கள் வெளியில் செல்லக்கூடாது என சொல்வார்கள். அது ஒரு மூட நம்பிக்கை என நம்மில் பலரும் நினைத்திருப்போம்.
ஆனால் அறிவியல் பூர்வமாக சூரிய கிரகணம் ஏற்படும்போது நாம் கண்டிப்பாக வெளியே செல்லக் கூடாது. ஏனெனில் சூரிய கிரகணத்தின் போது நாம் சூரியனை நேரடியாக பார்த்தால் நம்முடைய கண்கள் பாதிக்கப்பட்டு கண் பார்வையை இழக்கும் அபாயம் ஏற்படும். இதன் காரணமாகத்தான் சூரிய கிரகணம் ஏற்படும் போது வெளியில் செல்லக்கூடாது என கூறுகின்றனர்.