சூரிய சக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டறிந்து விருது பெற்ற மாணவிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினிஷா உமாசங்கர் என்ற மாணவி இளம் வயதிலிருந்தே அறிவியல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது சூரிய சக்தி மூலமாக இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் என்ற விருது பெற்றுள்ளார்.
அந்த சிறுமிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.