Categories
மாநில செய்திகள்

சூரிய சக்தி மூலம் 100% ஆற்றல்…. இலக்கை அடைந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்…..!!!!

சென்னை மத்திய ரயில் நிலையத்தில் நடைமேடை மற்றும் பயணிகள் தங்கும் இடங்களில் சூரிய தகடுகள் பொருத்தப்பட்டு 100% ஆற்றல் தேவை இலக்கை  பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே இணை மந்திரி அஸ்வினி வைஷ்னா வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவில், சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு தேவையான அனைத்து மின்சார வசதிகளையும் சூரிய சக்தி மூலம் பெறப்படுகிறது.

அதன்படி சென்னை சென்ட்ரல், எம்எம்சி வளாகம், காட்பாடி, தாம்பரம், மாம்பலம், கிண்டிமற்றும் செங்கல்பட்டு போன்ற 13 ரயில் நிலையங்களில் சூரியத் தகடுகள் நிறுவப்பட்டுள்ளது. அந்த ரயில் நிலையங்களில் உள்ள மின் விசிறிகள் பம்புகள் மற்றும் மின் சாதனங்கள் போன்ற அனைத்து மின் தேவைகளும் சூரிய சக்தி மூலம் பெறப்படுகிறது.

இதனை தொடர்ந்து மதுரை கோட்டத்திற்கு உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாரில் ரயில்வே தேவைக்காக காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 2019-2020 ஆம் ஆண்டில் மின்சக்தி ஆதாரங்களின் ரூ.16.64 கோடி சேமிப்பே தெற்கு ரயில்வே பெற்றுள்ளது. இதனால் மின்சார செலவுகளை குறைக்கவும் மற்றும் மின் தேவைக்காகவும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களை விரைவாக செயல்படுத்த ரயில்வே உறுதி கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |