சஹாரா பாலைவனத்தில் சூரிய மண்டலத்தின் அபூர்வ பாறை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சஹாரா பாலைவனத்தில் ஒரு விண்கல்பாறை கண்டெடுக்கப்பட்டது. இதை ஆய்வு செய்ததில் 460 கோடி ஆண்டுகள் பழமையான விண்கல் என்று தெரியவந்துள்ளது. இதுவரை நாம் ஆய்வு செய்ததில் இந்த விண்கல் பாறை தான் மிகவும் பழமையானது. இந்நிலையில் பிரிட்டானி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் சூரிய மண்டலத்தில் கடந்த காலத்தில் உடைந்த ஒரு பகுதி இது என்று தெரியவந்துள்ளது. இந்தக் கல் குறித்து ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.