சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் சூரிய மின் நிலையங்கள் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல நிறுவனங்கள் நிலத்தில் அதிக திறனுடைய சூரிய மின்சக்தி நிலையங்களையும், வீடுகளில் குறைந்த மேற்கூரை சூரிய மின்சக்தி நிலையங்களையும் அமைத்து கொடுக்கின்றன. இந்த நிலையில் வீடுகளில் சூரிய சக்தி மேற்கூரை அமைக்க மானியம் திட்டம் அறிமுகமாகியுள்ளது. அதன்படி இதற்கு 40 சதவீத மானியம் வழங்கப்படும்.
அடுக்குமாடி குடியிருப்பில் 10 கிலோ வாட் 100 கிலோவாட் வரை மின் நிலையம் அமைப்பதற்கு 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இதனையடுத்து தமிழகத்தில் இந்த மானிய திட்டம் மின் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி டெடா எனும் நிறுவனத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியம் பெற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. வீடுகளில் மானியத் திட்டத்தில் மின் நிலையம் அமைக்க விரும்புவர்கள் டெடாவின் இணையதளத்திற்கு சென்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.