சூரிய மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வாரியத்திற்கு வழங்குவதில் தற்போது உள்ள கட்டண கணக்கீட்டு முறையை மாற்றிக் கொள்ளும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடுகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற கட்டடங்களில் குறைந்த மேற்கூரை சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் பகல் நேரங்களில்மட்டும் மின்சாரம் கிடைக்கும். இதனால் சூரிய மின் நிலையம் அமைத்து இருந்தாலும், இரவில் வாரியத்தின் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சூரிய மின்சாரத்தை அதன் உரிமையாளர் பயன்படுத்தியது போக உபரி மின்சாரத்தை வாரியத்திற்கு விற்பனை செய்யலாம்.
இதற்காக தனி மீட்டர் பொருத்தப்படும். அதில் உற்பத்தியான சூரிய மின்சாரம் உரிமையாளர் பயன்படுத்தியது போக வாரியத்திற்கு வழங்கியதும், வாரியத்தின் மின்சாரத்தை பயன்படுத்தியதும் பற்றிய விவரங்கள் பதிவாகும். மேலும் சூரிய மின் நிலையம் அமைத்து இருப்பவர் மற்றும் மின் வாரியம் இடையிலான கணக்கீடு கட்டண அடிப்படையில் இருக்கிறது. இந்த முறை பதில் புதிய கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியபோது, கட்டண கணக்கீட்டு முறை என்ன என்பதே ஒரு உதாரணம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அதாவது1 கிலோ வாட் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையத்தில் இருந்து, ஒரு நாளில், 5 யூனிட் மின்சாரம் கிடைக்கும்.அந்த மின் நிலையம் அமைத்தவர், பகலில் 4 யூனிட் சூரியசக்தி மின்சாரத்தை, வாரியத்திற்கு தருவதாகவும்; இரவில் வாரியத்தின் 5 யூனிட்டை பயன்படுத்துவதாகவும் வைத்து கொள்வோம்.
அவர், 5 யூனிட் பயன்படுத்தியதில் தான் வழங்கிய, 4 யூனிட் சூரியசக்தி மின்சாரம் போக, மீதி உள்ள 1 யூனிட்டிற்கு உரிய கட்டணத்தை, வாரியத்திற்கு செலுத்த வேண்டும். மேலும் அதிக சூரியசக்தி மின்சாரம் கொடுத்திருந்தால், அதற்கான தொகையை வாரியம் வழங்கும். இதில், வாரியம் வழங்கும் தொகை மிக குறைவாக இருப்பதால், இந்த முறையை பலர் விரும்பவில்லை. இதனால் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் ஆர்வம் குறைவதாக தகவல்கள் வெளியானது.
எனவே, புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்த புதிய முறைக்கு நெட் மீட்டர் என பெயர். இதில் இரு தரப்பும் பரிமாறிக்கொள்ளும் மின்சாரத்திற்கு ஒரே விதமான கட்டணம், யூனிட் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். அதனால் தற்போதுள்ள முறையிலிருந்து நெட் மீட்டர் என்ற புதிய முறைக்கு வாரியத்தின் இணைய தளத்திற்கு சென்று மின் இணைப்பு எண்ணை குறிப்பிட்டு சூரிய மின்சக்தி நிலையங்கள் மாறிக்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.