சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார், அந்த பாணியில் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்வார் என நம்புகிறேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்..
8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் முதல் சுற்று போட்டியில் 8 அணிகள் விளையாடுகின்றன. இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.. அதே சமயம் இந்தியா, பாகிஸ்தான், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகளும் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்குள் விளையாட தயாராக இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக 45 போட்டிகள் நடைபெறுகிறது.
இன்று முதல் சுற்று போட்டியில் இலங்கை மற்றும் நமீபியா அணிகள் இந்திய நிரப்படி காலை 9.30 மணி அளவில் மோதுகின்றன.. அதேபோல மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து – ஐக்கிய அரபு அமீரகம் பிற்பகல் 1:30 மணி அளவில் பலப்பரிட்சை நடத்துகின்றன. இந்த டி20 உலக கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகளை சர்வேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இணைந்து செய்து வருகின்றன..
இந்தப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக ஐசிசியின் சார்பில் 16 நாடுகளின் கேப்டன்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து அணிகளுடைய கேப்டன்களும் கலந்து கொண்டனர்.. உலக கோப்பையின் பயிற்சிகள் மேற்கொண்டது மற்றும் அணியை பற்றி ஒவ்வொரு கேப்டன்களும் செய்தியாளரிடம் பேசினார்கள்..
அதேபோல ரோஹித் சர்மா சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது தற்போதைய டி20யின் ஆட்டத்தை பற்றி பேசினார்.. சூர்யகுமார் யாதவ் மீது பாராட்டுகளை குவித்தார் ரோஹித், அவருடன் அவர் சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார், இருவரும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், மேலும் யாதவ் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் விளையாடுகிறார்..
அவரைப் பற்றி ரோஹித் சர்மா கூறியதாவது: “சூர்யா சிறந்த ஃபார்மில் இருக்கிறார், நன்றாக பேட்டிங் செய்கிறார். சூர்யகுமார் யாதவ் மீதும் அவருக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த 12 மாதங்களாக இந்தியாவின் நம்பர் ஒன் டி20 பேட்டராக சூர்யகுமார் இருந்து வருகிறார்.. அவர் அந்த பாணியில் தொடர்ந்து பேட்டிங் செய்வார் என்று நம்புகிறேன், அவர் மிடில் ஆர்டரில் நன்றாக பேட் செய்வது எங்களுக்கு முக்கியம். அவர் மிகவும் நம்பிக்கையான வீரர், எப்போது விளையாடினாலும் பயமின்றி விளையாடுவார்.. அவர் தனது திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்துகிறார். அவர் எக்ஸ் ஃபேக்டராக மாறுவார் என்று நான் நம்புகிறேன், அவர் மட்டுமல்ல, எல்லோரும் எக்ஸ் ஃபேக்டராக மாறுவார்கள் என்று நம்புகிறேன் (சிரிக்கிறார்). உலகக் கோப்பையிலும் சூர்யா தனது நல்ல ஆட்டத்தை தொடர்வார் என நம்புகிறேன்” என்றார்.
இந்திய அணியில் தற்போது அதிகம் பேசப்படும் வீரர்களில் ஒருவர் சூர்யகுமார் யாதவ். ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்தத் தொடராக இருந்தாலும் சரி அல்லது அதற்கு முன் நடந்த ஆசியக் கோப்பையாக இருந்தாலும் சரி, அதிரடியாக ஆடுவதை நிறுத்துவதில்லை.. ஒரு ஆட்டத்தில் மோசமான ஸ்கோரைப் பெற்ற பிறகும், அடுத்த ஆட்டத்தில் அவர் வலுவாக எழுச்சி பெற்று தனது தகுதியை நிரூபிக்கிறார்.
சூர்யகுமார் யாதவ் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 டி20 பேட்டர் ஆவதற்கான போட்டியில் உள்ளார்.. அவர் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார் மற்றும் முதலிடத்தை பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர்-பேட்டர் முகமது ரிஸ்வான் ஆக்கிரமித்துள்ளார்.. கேம்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, யாதவ் தரவரிசை பட்டியலில் ஒரு பெரிய பாய்ச்சலைப் பெற்றார்.. மேலும் உலகக் கோப்பையிலும் சிறப்பாக ஆடி ரிஸ்வானை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..