Categories
கிரிக்கெட் விளையாட்டு

சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்…. முன்னாள் கேப்டன் சச்சின் புகழாரம்…!!!

இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையே கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மேட்சில் இங்கிலாந்து அணி 215 ரன்கள் எடுத்தது. இதில் டேவிட் மலான் அதிகபட்சமாக 77 ரன்களை எடுத்திருந்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடியது. ஆனால் இந்திய அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு களத்தில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் குறிப்பாக சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடினார்.

இவர் 117 ரன்கள் எடுத்து, 19 ஓவரில் ஆட்டம் இழந்தார். இந்த மேட்சில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் சூர்யகுமார் யாதவை புகழ்ந்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் எனவும், அதிலும் சில ஷாட்கள் அபாரமாக இருந்தது எனவும் புகழ்ந்துள்ளார். அதன் பிறகு பாயிண்ட் திசையில் ஸ்கூப் செய்து சிக்ஸர் அடித்தது அசத்தலாக இருந்தது. மேலும் பாயிண்ட் திசையில் ஸ்கூப் செய்து சிக்ஸர் அடித்த போட்டோவையும் சச்சின் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |