பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
பாலா இயக்குகின்ற திரைப்படத்தில் சூர்யா நடிக்கின்றார். இவர்கள் இருவரின் கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கின்றார். மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கின்றது.
இந்தப் படத்தில் சூர்யா காது கேட்காத வாய் பேச முடியாத வேடத்தில் நடிப்பதாக தகவல் வந்த நிலையில், படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நேற்று தொடங்கி உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பானதுனது முதல் கட்டமாக 45 நாட்கள் நடைபெறுகின்றது குறிப்பிடத்தக்கது.