நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
விஜய் மற்றும் சூர்யா மீது மீரா மிதுன் வைத்த குற்றச்சாட்டுகள் சமூக வலைத்தளத்தில் சில தினங்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருக்கிறது. விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்யவும், மீரா மிதுன் ட்விட்டர் வீடியோ பதிவில் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். மீரா மிதுனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதற்கு பலரும் கடுமையாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் பாரதிராஜா நேற்று கடுமையாக எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இந்த சர்ச்சைக்கு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் 2018-ஆம் ஆண்டில் வெளியிட்ட ட்விட்டை மேற்கோள் காட்டியுள்ளார். ” தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினை ஆற்றி நம் தரத்தை நாமே குறைத்துக் கொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் சமூகம் பயன் பெரும் செயல்களுக்கு செலவிடுங்கள்” என்பதே அந்த பதிவு. மேலும்,” எனது தம்பி, தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்பது எனது விருப்பம்” என சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவரின் வேண்டுகோளை ஏற்று ரசிகர்கள் அமைதி காப்பார்களா என எதிர்பார்க்கப்படுகிறது.