சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு எப்போது நிறைவடையும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம், வாடிவாசல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் . இதில் எதற்கும் துணிந்தவன் படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற ஆகஸ்டு 31-ஆம் தேதியுடன் எதற்கும் துணிந்தவன் படத்தின் பெரும்பகுதி முடிக்கப்பட்டுவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்பின் 8 நாட்கள் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.