Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்”…. டீசர் வெளியீடு…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

நடிகர் சூர்யா நடிக்கின்ற “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று ,ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்கின்றார் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான சூரி, வினய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.

அண்மையில் திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யாவின் திரைப்படங்கள் அண்மைக்காலமாகவே ஓடிடியில் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது எதற்கும் துணிந்தவன் திரைப்படமானது தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. இதனையடுத்து திரைப்படத்தின் டீசர் ரிலீஸாகியுள்ளது. இத்திரைப்படமானது கமர்ஷியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |