சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த மார்ச் 10ஆம் தேதி திரையரங்கில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரிதும் கொண்டாடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதன் விளைவாக சன் நெக்ஸ்ட், நெட்பிளிக்ஸ் ஓடிடி தலங்களில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாக இருப்பதாக செய்தி வெளிவந்திருக்கிறது. இச்செய்தியானது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.