Categories
இந்திய சினிமா சினிமா

சூர்யாவுக்கு ஆஸ்கர் கிடைத்திருக்க வேண்டும்…. கிச்சா சுதீப் புகழாரம்….!!!

சூரரைப்போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவிற்கு ஆஸ்கார் வழங்கியிருக்க வேண்டும் என்று நடிகர் சுதீப் புகழாரம் சூட்டியுள்ளார்.

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் சூரரைப்போற்று இயக்கத்தில் வெளியான இந்தப் படம் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட படம் இந்த படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது இந்நிலையில் நான் ஈ, புலி போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கிச்சா சுதீப். சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யாவின் நடிப்பைப் பற்றி பாராட்டிப் பேசி இருந்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது: “சூரரைப்போற்று படத்தில் சூர்யா சிறப்பாக நடித்திருந்தார். உண்மையில் அவருக்கு ஆஸ்கர் விருது வழங்கி இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு சூர்யா தகுதியானவர். அந்த படத்தில் பிழையில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருந்தா.ர் ஒரு படத்தை பார்த்ததும் கதையாக படிப்பதும் வெவ்வேறானது. இந்த படம் கதாநாயகனை கொண்டாடும் படம் இல்லை. இதில் நடிகர் சூர்யா நடிக்க முன்வந்ததற்கு பெரிய துணிச்சல் வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |