Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவை பாத்து விஜய் கத்துக்கணும்! ரசிகர்களுக்கு சீமான் பதிலடி ..!!

வேலுநாச்சியார் அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மரியாதை செலுத்தபட்டது. பின்னர் செய்தியாளர்கள்களிடம் சீமான் பேசினார். அப்போது, அண்மையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து சீமான் விமர்சனம் செய்தார். இதனால் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள் சீமானை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதுகுறித்தான கேள்விக்கு பதிலளித்த சீமான், விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்து என்ன ஆகப் போகுது ? எல்லாமே என்னோட தம்பிகள் தான். அவர்களுடைய ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றார். அவர்கள் அரசியல் படுத்தப்படவில்லை.

நடிப்பது மட்டுமே நாடாளா தகுதி வந்து விடுகிறது என்பதை நான் ஏற்கவில்லை. எங்களுடைய கோட்பாடு ஏற்கவில்லை. தியாகங்களை திரைக் கவர்சியால் மூடுவதை நங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.எம்ஜிஆர் அவர்களைக் கூட நாங்கள் தொடாமல் பயணிப்பது இதனால் தான். இப்பொழுது அவரை ஏன் தொட்டு வாறீங்க. அவருக்கு முன்பு காமராஜர், கக்கன், ஜீவானந்தம் இருக்கின்றார். இப்போது நல்லகண்ணு வாழ்ந்து கொண்டிருக்கின்றார் இவர்களைத் தாண்டி அரசியல் தலைவர்கள், புனிதர்கள் உண்டா ?

தமிழனுக்கு ரோல்மாடலே இல்லாதா மாதிரி எம்ஜிஆர் மாதிரி வரணும், ரஜினி வரணும் என்று சம்மந்தமே இல்லாதவர்களை கொண்டு வாறீங்க என்றால் வெறுப்பு வரத்தான் செய்யும். இதை புரியாத தம்பிகள், சிலர் பேசுவார்கள். தொடக்க காலத்திலிருந்து தம்பி விஜய்யை அதிகமாக தற்காத்து இருந்தது நான் தான். மற்றவர்கள் போல கிடையாது விஜய் மீது எனக்கு பேரன்பு உண்டு. என்னோட தம்பி குறைந்தபட்சம் சூர்யா அளவிற்காவது விஜய் குரல் கொடுக்க வேண்டும். விஜய்யின் புகழ் வெளிச்சத்தில் மக்களுக்காக நிற்க வேண்டும்.

விஜய் அரசியலுக்கு வரட்டும்.  வர வேண்டாம் என்று சொல்லவில்லை. மக்களுக்காக காலத்தில் நின்று, போராடி மக்களின் நன்மதிப்பை பெற்று அரசியல் செய்யுங்க. வெறும் திரை கவர்ச்சியை வைத்துக் கொண்டு, நாட்டை  ஆள வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள் என்று தான்  நான் சொல்கின்றேன் என்றார்.

எம்ஜிஆரை பற்றி எதுமே தெரியாம பேசுகிறீர்கள் என்று சொல்கிறார்கள் ? என்ற கேள்விக்கு என்னை விட எம்ஜிஆரை பற்றி அதிகம் தெரிந்தது யார் ? சொல்லுங்க, யாரையாவது பேச சொல்லுங்க.சீமானுக்கு ஒண்ணுமே தெரியவில்லை, எம்.ஜி.ஆர் ஈழத்தமிழர்களின் தெய்வம் என்று வைகோ கூறியது குறித்தான கேள்விக்கு, அப்படியா..! நானும் தானே சொல்கின்றேன். எங்கள் அண்ணனுக்கு உதவுவதில் அவர் சரியாக இருந்தார்.  மற்ற எந்த இடத்தில் சரியாக இருந்தார். யார் என்னுடன் வாதிடுகிறார்கள் ?

எங்கள் வைகோ அண்ணனுக்கு என்னைய திட்டனும், அவ்வளவுதான். பெரியவர் திட்டுறாரு, சின்னவரு கேட்டுட்டு போக வேண்டியதுதானே. தம்பி கேட்டு போறேன். எம்ஜிஆர் நல்லாசி கொடுத்தார் என்றால் ஏன் அண்ணன் வைகோ எம்ஜிஆர் கட்சியில் போய் சேரவில்லை. வைகோ அண்ணன் ஏன் தனியாக கட்சி ஆரம்பித்தார் ? திமுகவில் ஏன் இருந்தார் ? என்று பதிலடி கொடுத்தார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், இது எல்லாம் பைத்தியக்காரத்தனமான கேள்வி. 12 விழுக்காடு எங்களுக்கு வாக்கு செலுத்தியுள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் 100 க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை வென்றுள்ளோம். எளிய மக்கள் எங்களுக்கு வாக்கு செலுத்தியுள்ளார்கள்.

நடந்த தேர்தலில் அதிக விழுக்காடு வாக்கு பெற்றது உள்ளாட்சி தேர்தலில் தான். இதனால் மக்கள் குறை சொல்லாதீர்கள். என்னை அங்கீகரிக்க வேண்டாம். எனக்கு என் தலைவர் இருக்கிறாரா ? இல்லையா அப்படி என்று கேட்பார்கள் ? இருக்காரு என்பது எனக்கு பலத்தை கொடுக்கின்றது அவ்வளவுதான். நான் இந்த வேலையைச் செய்ததில்  மனநிறைவை அடைகின்றேன்.

என்னை அங்கீகரி, அங்கீகரிக்காமல் போ,  என்னை வெல்ல வை, தோற்கடி. அதைப்பத்தி எனக்கு என்ன கவலை ? ஆனால் உழைத்தேன் என்பதோடு நான் வேலை செய்கின்றேன். மக்களை நேசித்து, சந்தித்த அந்த நிறைய இருக்கின்றது. என்னுடைய மரணம் எனக்கு வலிக்காது. நான் நிம்மதியாக மரணிப்பேன். நான் பிறந்த பயனை, கடனை செய்து விட்டேன், அவளவு தான். என்னை அங்கீகரிக்கிறார்கள்,  அங்கீகரிக்கவில்லை என மக்களைக் குறை சொல்லக் கூடாது என சீமான் தெரிவித்தார்.

Categories

Tech |