டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியவர்களை வைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கனவு அணியை உருவாகியுள்ளது..
2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது..
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் அனைவரையும் வைத்து ஐசிசி மதிப்பு மிக்க ஒரு கனவு அணியை உருவாக்கி உள்ளது. அதில், இந்திய வீரர்கள் இரண்டு பேர் இடம் பிடித்துள்ளனர். இங்கிலாந்து அணியில் இருந்து 4 வீரர், பாகிஸ்தான் அணியில் இருந்து 2 வீரர், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வே அணியிலிருந்து தலா ஒரு வீரர், மேலும் 12 வது வீரராக இந்திய அணி வீரர் ஒருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ள இந்த கனவு அணிக்கு கேப்டனாக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தொடக்க ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல மற்றொரு தொடக்க வீரர் இங்கிலாந்தை சேர்ந்த பட்லரின் ஜோடியான அலெக்ஸ் ஹேல்ஸ் தான் இந்த கனவு அணியிலும் தொடக்க ஆட்டக்காரராக இடம் பிடித்துள்ளார். 3ஆவது இடத்தில் விராட் கோலியும், 4ஆவது இடத்தில் சூர்யகுமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 5ஆவது இடத்தில் நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ், 6ஆவது இடத்தில் ஜிம்பாபவே ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசாவும், 7ஆவது இடத்தில் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷதாப் கான், 8ஆவது இடத்தில் தொடர் நாயகன் விருது வென்ற சாம் கரன், 9ஆவது இடத்தில் ஆன்ரிச் நார்ட்ஜே, 10ஆவது இடத்தில் மார்க் வுட், 11ஆவது இடத்தில் ஷாகின் அப்ரிடி ஆகியோர் தான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ள டி20 உலக கோப்பையின் 2022 கனவு அணி :
1. ஜோஸ் பட்லர் (கேப்டன்) – 212 ரன்கள் 9 அவுட்
2. அலெக்ஸ் ஹேல்ஸ் – 225 ரன்கள்
3. விராட் கோலி – 296 ரன்கள்
4. சூரியகுமார் யாதவ் – 239 ரன்கள்
5. கிளென் பிலிப்ஸ் – 201 ரன்கள்
6. சிக்கந்தர் ராசா – 219 ரன்கள் மற்றும் 10 விக்கெட்
7. ஷதாப் கான் – 98 ரன்கள் மற்றும் 11 விக்கெட்
8. சாம் கரன் – 13 விக்கெட்டுகள்
9. ஆன்ரிச் நார்ட்ஜே – 11 விக்கெட்டுகள்
10. மார்க் வுட் – 9 விக்கெட்டுகள்
11. ஷாகின் அப்ரிடி – 11 விக்கெட்டுகள்
12. ஹர்திக் பாண்டியா – 128 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகள்
இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The @upstox Most Valuable Team of the Tournament revealed 👀
What do you make of it?
More ➡️ https://t.co/GUrAkC9cOK#T20WorldCup pic.twitter.com/cnFcM1ZXBg
— ICC (@ICC) November 14, 2022