பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் திருச்சி சிவா, அக்கட்சியின் பெண் நிர்வாகியான டெய்ஸியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ 2 நாட்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சி விவகாரங்கள் தொடர்பாக பாஜகவில் சூர்யா சிவாவுக்கும், டெய்சிக்கும் பிரச்சனை நிலவி வருகிறது.
இந்நிலையில், டெய்சியை ஆபாச வார்த்தைகளால் சூர்யா சிவா வசைப்பாடிய ஆடியோ இணையயத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிரச்சனையை பேசி தீர்த்துவிட்டோம் என்று டெய்சி தெரிவித்துள்ளார். தம்பி போல்தான் சிவா என்றும் இதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.