Categories
சினிமா

சூர்யா ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது எதற்காக?… அவர் இந்தியர் கிடையாதா?… காயத்ரி ரகுராம் டுவிட்….!!!!

காயத்ரி ரகுராம் நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” ஆகும். இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமின்றி அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை 1 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகியது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிய இந்த படம் பல பேரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்த படம் தொடர்பாக சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து கூறி சமூகவலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மேலும் பல்வேறு திரைபிரபலங்களும் படம் தொடர்பாக வாழ்த்து கூறி பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இப்படத்தை பார்த்த காயத்ரிரகுராம் தன் சமுகவலைத்தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவற்றில், ராக்கெட்டரி திரைப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

அதேபோன்று பிற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். பிற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய்ஹிந்த் என்று கூறுகிறார்கள். ஆனால் சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் கூற மறுத்தது ஏன்..? அவர் இந்தியர் கிடையாதா..? இந்தியா வாழ்க என சொல்வதில் அவருக்கு பெருமையாக இல்லையா..? என கேள்வி எழுப்பி பதிவிட்டிருக்கிறார். இவரின் இந்த கருத்து சமூகவலைத்தளத்தில் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது.

Categories

Tech |