சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடித்துள்ள ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாது படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்த சூரரைப்போற்று, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் மூன்றாவதாக ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற படத்தை தயாரித்துள்ளார்.
Every film should entertain & make an impact, I believe this new team has made a strong one. Hope you like it!#RaameAandalumRaavaneAandalum trailer https://t.co/nkVS4i8znf#RARAOnPrime24Sep @PrimeVideoIN#Jyotika @arisilmoorthy @mynnasukumar @krishoffl @MithunManick pic.twitter.com/PGqyDsz3Uu
— Suriya Sivakumar (@Suriya_offl) September 15, 2021
இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடித்துள்ளார். அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தின் டிரைலருடன் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தற்போது இந்த டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது .