நடிகர் சூர்யா அருவா படத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை என்றும் படம் வரத்து என்ற தகவலும் வெளியாகியுள்ளது
மார்ச் 1 ம் தேதி ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “அருவா”என்ற படம் உருவாகும் என அதிகாரபூர்வமாக வெளியிட்டன. சூர்யாவின் 39வது படமான இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் என்றும் சூர்யா, ஹரி ஒன்றாக இணைந்து தயாரிக்கும் ஆறாவது படம் எனவும் தெரிவித்தனர். ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கி இந்த வருடம் தீபாவளிக்கு படத்தை வெளியிடலாம் என திட்டமிட்டனர். படத்தின் தலைப்பில் தொடங்கிய சர்ச்சை தொடர்ந்து படத்தை பற்றிய நெகட்டிவான செய்திகள் மட்டுமே அதிகமாக வெளியானது.கொரோனா தொற்றின் காரணமாக படப்பிடிப்புகள் துவங்கவில்லை.
அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தை சூர்யா நடிக்க உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் ஹரி அவருடைய மைத்துனரான அருண் விஜய்யை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது. என்ன நடந்தது என தெரியவில்லை. தற்போது ‘அருவா’ படம் இனி நடக்க வாய்ப்பில்லை என்றும் ‘அருவா’ படத்தில் நடிக்க சூர்யாவிற்கு விருப்பமில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘வாடிவாசல்’ படத்திற்கு முன்பு பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இனி ‘அருவா’ படம் எடுக்கப்படாதா அல்லது “வாடிவாசல்” படத்திற்கு பின் படப்பிடிப்பு நடைபெறுமா என்பதை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.