சூர்யா மற்றும் பாலா இணைந்து பணியாற்றும் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் வெற்றிக்கு பின் பாலா இயக்கும் புது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக இந்த கூட்டணியில் பிதா மகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இப்போது இவர்கள் மீண்டுமாக இணைந்து இருப்பதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இந்த படத்திற்கு தற்காலிகமாக “சூர்யா 41” என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசை அமைக்கும் இந்த படத்தை 2டி என்டர்டைன் மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில் துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதற்கிடையே சூர்யா மற்றும் பாலாவிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சூர்யா விலகியதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது போன்ற தகவல்கள் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவியது. இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் மீண்டும் சூர்யா 41 படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் சூர்யா பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் படம்பிடிப்பு தாமதமாகி கொண்டே இருப்பதால் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம் படத்திலிருந்து விலகி உள்ளார். இந்த படம் தாமதமாவதால் வேறொரு பாடத்தில் பணியாற்ற முடியாத சூழ்நிலை காரணமாக படத்தில் இருந்து விலகுவதாக செய்திகள் வந்திருக்கின்றது. இத்திரைப்படம் தாமதமாவதால் பல கலைஞர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.