சூர்யா 39 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 40-வது படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது லுக் மற்றும் மூன்றாவது லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
Watch out for the FIRST LOOK of #Suriya39 by 5PM today!#Suriya39FirstLook@Suriya_offl @tjgnan @prakashraaj @rajisha_vijayan @rajsekarpandian @srkathiir #Manikandan #LijoMolJose #RameshRao @RSeanRoldan @KKadhirr_artdir @philoedit @anbariv @kabilanchelliah pic.twitter.com/zYUFAPZE7y
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) July 23, 2021
இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யாவின் 39-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. தா.செ.ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.