Categories
சினிமா

சூர்யா, விஜய் சேதுபதியுடன் போட்டியிட வேண்டியுள்ளது…. பிரபல வில்லன் நடிகர் ஓபன் டாக்….!!!!

தமிழ்,தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல வில்லன் நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு தொடர்ந்து படங்கள் குவிந்து வருகின்றனர். இவர் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது இது குறித்து பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டில், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நான் நடித்த காஞ்சிவரம், இருவர், மேஜர், பொம்மரிலும், ஆகாச மந்தா போன்றவற்றில் வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது ஒரு தொழில், அதில் வாழ்வதற்காக பணம் கிடைக்கிறது. கமர்சியல் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு எனக்கு பிடித்த படங்களுக்கு குறைந்த சம்பளம் வாங்கிக் கொள்வேன்.

நம்மை சுற்றி மாற்றிக் கொண்டே இருக்கும் உலகத்தை சினிமாவில் காட்ட முடியாமல் தான் பெரிய நடிகர்கள் படங்கள் கூட தியேட்டரை விட்டு போய் விடுகின்றனர். அதனை தொடர்ந்து சூர்யா,விஜய் சேதுபதி, பகத் பாசில், சாய்பல்லவி போன்றவுடன் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள நடிகர்கள் கூட போட்டியிட வேண்டி இருக்கிறது. நட்சத்திரம் அந்தஸ்துக்கான அர்த்தம் தற்போது மாறிவிட்டது. மேலும் வித்தியாசமான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் பாராட்டை பெறுவர் தான் நிற்க முடியும். மக்களிடையே சினிமாவை பற்றிய நல்ல புரிதல் உள்ளது என்று கூறினார்.

Categories

Tech |