பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, சூரி, தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற ஜூலை மாதம் 2-வது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட உள்ளது.