Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூர்யா 40’ படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், சிபி, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று ‘சூர்யா 40’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்ற தகவலை இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |