Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யா 42” படம் குறித்து ட்விட் செய்த சூர்யா….. முதல் ஆளாக வந்து விஜய் ரசிகர்கள் செய்த காரியம்….!!!!!!

சூர்யா 42 படம் குறித்து சூர்யா செய்த ட்விட்டர் பதிவிற்கு விஜய் ரசிகர்கள் செய்த காரியம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். இவரின் 42 வது படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்தது. அதன்படி சூர்யா 42 படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்து நிற்கும் புகைப்படத்தை ரசிகர்கள் வெளியிட்டு வைரலானது. இந்த படத்திற்கு சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் பூஜை மூன்று நாட்களுக்கு முன்பு போடப்பட்டது.

இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் சூர்யா. மேலும் அத்துடன் தான் புது கெட்டப்பில் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா 42 திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உங்களின் ஆசி தேவை எனக் கூறியுள்ளார். இதற்கு முதல் ஆளாக விஜய் ரசிகர்கள் தான் மனதார வாழ்த்தி உள்ளார்கள். விஜய்-சூர்யா ரசிகர்கள் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படும். ஆனால் அதை எல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் சூர்யாவை வாழ்த்தியுள்ளார்கள் விஜய் ரசிகர்கள். மேலும் அஜித் ரசிகர்களும் சூர்யாவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

Categories

Tech |