Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சூறாவளி காற்றால்…. சேதம் அடைந்த விசைப்படகுகள்…. மீனவர்களின் கோரிக்கை….!!!!

சூறாவளிக்காற்றில் நங்கூர கயிறுகள் அறுந்து விழுந்து பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்று வீசியது. இதனால் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த அந்தோணி ராசு, கிருபை, கென்னடி உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 10 விசைப் படகுகளுக்கான நங்கூர கயிறுகள் அரிந்து ஒன்றோடு ஒன்று மோதி உள்ளது. இதில் அனைத்து படகுகளும் சேதம் அடைந்தது.

இதனைக் கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து மீனவ சங்க தலைவரான ஜேசுராஜாவிடம் கூறியுள்ளனர். இது குறித்து ஜேசுராஜா கூறுகையில் “ஏற்கனவே புயலால் பாதிக்கப்பட்ட மீன்பிடி படகுகளுக்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கவில்லை. இந்த நிலையில் சூறாவளி காற்றால் பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்துள்ளது. இந்த படகுகளுக்காவது அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |